உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

அ.தி.மு.க., பிரசாரம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

சிதம்பரம்; சிதம்பரத்தில், அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட அவைத் தலைவர் குமார், பொருளாளர் தோப்பு சுந்தர், துணை செயலாளர்கள் செல்வம், தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள் கர்ணா, சிங்காரவேல் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, அசோகன், ரெங்கசாமி, வாசு முருகையன், சிவக்குமார், ஜோதிபிரகாஷ், நவநீதகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி