மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
08-Sep-2025
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றியம் ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன் தலைமை தாங்கினார். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பங்கேற்று, தி.மு.க., அரசின் சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி, திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிர மணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துராமன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், மாவட்ட பொருளாளர் அய்யாசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Sep-2025