அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த விஜயமா நகரத்தில் அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், விருத்தா சலம் நகர செயலர் சந்திரகுமார், மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருளழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடு மற்றும் சட்டசபை தேர்தல் பணி குறித்து நிர்வாகிகளிடம் விளக்கி பேசினார். இதில், ஜெ., பேரவை மாவட்ட செயலர் உமாமகேஸ்வரன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சி களை சேர்ந்த நிர்வாகி கள், அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர். ஒன்றிய அவை தலைவர் கருணாகரன் நன்றி கூறினார்.