உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பதவிக்காக இலவுகாத்த கிளியாய் அ.தி.மு.க.,வினர்

பதவிக்காக இலவுகாத்த கிளியாய் அ.தி.மு.க.,வினர்

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி தொகுதியில் கடந்த 5ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க.,விற்கு புதிய ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. விரைவில் சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அதோ, இதோ என நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதனால் கட்சி பிரிவினையிலும் அணி தாவாமல் காத்திருக்கும் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.நம்பிக்கையோடு காத்திருக்கும் கட்சியினருக்கு பொறுப்பு வழங்கினால் தான் ஆளும்கட்சிக்கு இணையாக பணிகள் நடக்கும் என்கின்றனர் பதவிக்காக இலவு காத்த கிளியாய் காத்திருக்கும் அ.தி.மு.க.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை