உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் சிறுபாக்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மங்களூர் ஒன்றிய அ.தி.மு.க., அவைத்தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை ஒன்றிய செயலர் செந்தில், அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் சந்திரபாபு, அய்யாசாமி, குமார், ராமலிங்கம், செல்வராணி முன்னிலை வைத்தனர். மங்களூர் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலர் பாண்டியன் வரவேற்றார். கடலூர் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழி தேவன் சிறப்புரையாற்றினார். இதில், முன்னாள் ஒன்றிய சேர்மன் தங்கராசன், அ.தி.மு.க., நகர செயலர் அருள் அழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை