உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

 அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

சிதம்பரம்: சிதம்பரம், சிவபுரி கிராமத்தில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. கிழக்கு மாவட்ட பேரவை செயலாளர் பால சுந்தரம் தலைமை தாங்கி னார். அமைப்பு செயலாளர் முருகுமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வீடு வீடாக சென்று, தி.மு.க.,வை கண்டித்தும், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தை துவக்கி வைத்தார். நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் குமார், இணை செயலாளர் ரெங்கம்மாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, மாவட்ட மகளிர் அணி லதா ஜெக ஜீவன்ராம், ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி பெரியசாமி, பேரவை இணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன், வடமலை மற்றும் நிர்வாகிகள் செங்குட்டுவன், கலியபெருமாள், ஸ்ரீராம், மணிகண்டன், அசோக், தினேஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ