மேலும் செய்திகள்
பெயரில் மட்டுமல்ல தேர்ச்சியிலும் 'சென்சுரி'
09-May-2025
பரங்கிப்பேட்டை: பு.முட்லுார் அட்சயா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 90 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவி மொழியாழினி 595 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார். மாணவி நவீனா 593 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் பரத் 592 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.கணிதம் பாடத்தில் 11 பேர், இயற்பியல் பாடத்தில் 11 பேர், வேதியியல் பாடத்தில் 30 பேர், உயிரியியல் பாடத்தில் 10 பேர், கணினி அறிவியல் பாடத்தில் 16 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். 27 மாணவர்கள் 550 மதிப்பெண்ணுக்கு மேல், 57 பேர் 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். சாதனைப் படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் புருஷோத்தமன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
09-May-2025