உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே சுரங்கப்பாதையில் மதுபிரியர்கள் அட்டகாசம்

ரயில்வே சுரங்கப்பாதையில் மதுபிரியர்கள் அட்டகாசம்

வடலுார்; வடலுார் அடுத்த சேராக்குப்பத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி ஏராளமான பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வாகனங்களிலும், விவசாயிகள் வயல்களுக்கு தங்களது கால்நடைகளை ஓட்டிச் சென்றும் வருகின்றனர். இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை போலீசார் கட்டுப்படுத்தாததால் மதுபிரியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் போலீசார் ரோந்து செல்ல வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை