உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாத்தனுார் அணை திறப்பால் மாவட்டத்தில் அலர்ட்: வெள்ள அபாயத்தால் மக்கள் அச்சம்

சாத்தனுார் அணை திறப்பால் மாவட்டத்தில் அலர்ட்: வெள்ள அபாயத்தால் மக்கள் அச்சம்

கடலுார்: சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கடலுார் மாவட்ட, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி இந்திய பெருங்கடலில் கடந்த 9 ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. அது, 10ம் தேதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் நிலை உள்ளது. இருப்பினும் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது.ஏற்கனவே கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். மேலும் தொடர் மழையால் வீடு, வாசல்களில் தண்ணீர் ஊற்று எடுக்கிறது. இந்நிலையில், மழை தொடர்வதால் மக்கள் அவதியடைந் வருகின்றனர்.மேலும், மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி, கர்நாடகா மாநிலத்திலும் மழை பெய்து வருவதால் சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் அணையின் பாதுகாப்பு கருதி படிப்படியாக நீரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.அதன் காரணமாக நேற்று முன்தினம் 5000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அது நேற்று 13,000 கனஅடியாக உயர்ந்தது. இது மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதுதவிர பெண்ணையாறு ஓடி வரும் மாவட்டங்களில் கனமழை பொழிவதால் தண்ணீர் பெண்ணையாற்றில் சென்று வடிகிறது. இதனால் திறந்துவிடப்பட்ட தண்ணீரை விட மேலும் ஒரு மடங்கு தண்ணீர் சேர்ந்து வருகிறது. ஏற்கனவே பெண்ணையாற்றில் கரை உடைந்த பகுதி முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், பணி நடந்து வருகிறது.இந்நிலையில் மீண்டும் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எச்சரிக்கை

சாத்தனுார் அணையில் இருந்து நேற்று காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கடலுார் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கடலுார் அடுத்த குண்டுஉப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா பகுதிகளில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையிலும், குண்டுசாலை, கோண்டூர் ஊராட்சியில் பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நேற்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை