உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனைத்திந்திய கூட்டுறவு  வார விழா 

அனைத்திந்திய கூட்டுறவு  வார விழா 

கடலுார்: கடலுார் சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, கூட்டுறவு கொடியேற்றி வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி வார விழா உறுதிமொழி வாசித்தார். விழாவில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் இம்தியாஸ், சரக துணைப் பதிவாளர்கள் கடலுார் துரைசாமி, சிதம்பரம் ரங்கநாதன், விருத்தாசலம் சவிதா, மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை