உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுவர் பூங்கா சீரமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கீடு

சிறுவர் பூங்கா சீரமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கீடு

நெல்லிக்குப்பம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நெல்லிக்குப்பத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா சீரமைக்க ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சி 29 வது வார்டு மாருதி நகரில், பல லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அங்கு சிறுவர்கள் விளையாடுவதற்காக ராட்டினம் போன்ற பல்வேறு உபகரணங்கள் வைத்திருந்தனர். அவைகள் முறையாக பராமரிக்காததால் பாழானது. அந்த இடம் மாடுகளின் மேய்ச்சல் இடமானது. நகராட்சி சேர்மன் வீட்டின் அருகே இந்த பூங்கா இருந்தம் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பூங்காவை சரி செயய நகராட்சி மூலம் ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி