மேலும் செய்திகள்
புதிய நகராட்சி அலுவலகம் கட்ட மண்பரிசோதனை
06-Nov-2024
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் புதிய ஒன்றிய அலுவலகம் கட்ட 5.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.விருத்தாசலம் கடலுார் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள், அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஒன்றிய அலுவலகம் வலுவிழந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக் காலத்தில் கோப்புகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் கூட்டம் நடத்திட போதிய இட வசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது.இதை தவிர்க்கும் வகையில், கடந்த 2011 - 16ம் ஆண்டில், அப்போதைய அ.தி.மு.க., நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் புதிய கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால், இதுநாள் வரை புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்படவில்லை.இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கையின்பேரில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட வருவாயின் திட்டப் பகுதி (எஸ்.சி.பி.ஏ.ஆர்.,) மூலம் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்ட 5.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட அனுமதியும் பெறப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணியும் துவங்கப்பட உள்ளது.
06-Nov-2024