உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்பேத்கர் சிலை மீட்பு: திட்டக்குடியில் பரபரப்பு

அம்பேத்கர் சிலை மீட்பு: திட்டக்குடியில் பரபரப்பு

திட்டக்குடி; திட்டக்குடியில் கேட்பாரற்று கிடந்த அம்பேத்கர் சிலையை வருவாய்த்துறை உதவியுடன் போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திட்டக்குடி நகராட்சி, தி.இளமங்கலத்தில் அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதி இருந்தது. இந்த விடுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் சிலை வைக்க முயன்றனர். ஆனால் சில காரணங்களால் சிலை வைக்காமல் விடுதியின் ஒரு அறையில் வைக்கப்பட்டது.பராமரிப்பின்றி உள்ள மாணவர் விடுதி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. இதனால் விடுதி அறையில் இருந்த சிலையை அருகிலுள்ள கோர்ட் சுற்றுச்சுவர் அருகே துணியால் மூடி மறைத்து வைக்கப்பட்டது.இதுதொடர்பாக நேற்று பகல் 11:00 மணியளவில் மூடி வைக்கப்பட்ட துணி கிழிந்த நிலையில் அம்பேத்கர் சிலை கேட்பாரற்று கிடப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தகவலறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையிலான போலீசார் வருவாய்த்துறையினர் உதவியுடன் நேற்று மாலை 4:00 மணியளவில் மீட்டு, திட்டக்குடி நகராட்சி அலுவலக பதிவறையில் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ