உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க ஆயத்த கூட்டம்

ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க ஆயத்த கூட்டம்

மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்தக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பேசினர். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் அக்., 18ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது. போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ