உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போட்டுக்கொடுத்து பெயர் வாங்கும் அதிகாரி

போட்டுக்கொடுத்து பெயர் வாங்கும் அதிகாரி

கடலுார் மாநராட்சியில் கமிஷனராக அனு பொறுப்பேற்றது முதல் மாநகரத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி மூலம் செய்யப்படும் சில சேவைகள், பணிகள் யாவும் நெருக்கமாக உள்ள ஒரு பெண் அதிகாரி மூலம் செயல்படுத்தி வருகிறார்.தன்னிடம் மட்டுமே நெருக்கமாக அனைத்து பணிகளையும் செய்ய சொல்கிறார் என்பதற்காக, இதையே பயன்படுத்தி, அலுவலகத்தில் அதிகார பலத்துடன் வலம் வருகிறாராம். மேலும், வேண்டாதவர்கள், தன்னை மதிக்காதவர்களை அடிக்கடி கமிஷனரிடம் 'போட்டுக்கொடுத்து' நல்ல பெயர் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த அதிகாரியால் பாதிக்கப்பட்ட பலரும் புலம்ப துவங்கிவிட்டனர். அலுவலகத்தில் அந்த பெண் அதிகாரியை பார்த்தாலே மாநாராட்சி ஊழியர்கள் அலறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை