உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: தமிழ் மாநில அங்கன்வாவடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வி, பொருளாளர் காயத்திரி, மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசி கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் தர்மலிங்கம், ரங்கநாதன் வாழ்த்திப் பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள்மற்றும் உதவியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டார்ச் லைட்' அடித்து கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை