உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம்; கருவேப்பிலங்குறிச்சி அடுத்த நேமம் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, பெண்ணாடம் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். கருவேப்பிலங்குறிச்சி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சரண்யா, கால்நடை ஆய்வாளர் பொன்வேலன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் லதா மகேஸ்வரி அடங்கிய குழுவினர், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருது வழங்கப்பட்டது.செந்தாமரைக்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !