உள்ளூர் செய்திகள்

அன்னாபிஷேகம் 

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் அன்னாபிேஷகம் நடந்தது. இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு 100 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட அன்னம்) சாற்றப்பட்டு, சிறப்பு பூஜை, அன்னாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை