லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி
கடலுார்: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நேற்று (28ம் தேதி) முதல் நவ., 3 வரையில், கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரவி, ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, உதவி ஆணையாளர்(கலால்) சந்திரகுமார், தனித்துணை ஆட்சியர் ரமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.