மேலும் செய்திகள்
ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
01-Nov-2025
கடலுார்: கடலுார் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம், இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., சாந்தி தலைமை தாங்கினார். அவர் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு, ஊழலை ஒழிப்பதில் பொதுமக்களின் பங்கு உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து கல்லுாரி மாணவிகளிடையே ஊழல் தடுப்பு குறித்த கலந்துரையாடல் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடலுார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜ், அன்பழகன், கல்லுாரி செயலாளர் நிர்மலா ராணி, முதல்வர் சுசிலாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Nov-2025