வீட்டு மனைப்பட்டா கேட்டு எம்.எல்.ஏ.,விடம் முறையீடு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே மனைப்பட்டா கோரி ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,விடம் கிராம மக்கள் முறையிட்டனர்.விருத்தாசலம் அடுத்த கோவிலானுார் ஊராட்சியில் பல ஆண்டுகளாக வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மனைப்பட்டா கோரி முறையிட்டு வந்தனர். தகவலறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொது மக்களை நேரில் சந்தித்து விசாரித்தார். அதில், மங்கலம்பேட்டை பேரூராட்சி எல்லையொட்டி, கோவிலானுார் ஊராட்சியில் பல ஆண்டுகளாக மனைப்பட்டா இல்லாமல் வசித்து வருவது தெரிந்தது.தொடர்ந்து, மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தாசில்தார் உதயகுமார், வி.ஏ.ஓ., அசோக்ராஜ், காங்., நகர தலைவர் வேல்முருகன், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.