உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழில் முனைவோர் மேம்பாடு படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

தொழில் முனைவோர் மேம்பாடு படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

கடலுார்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் துவங்க உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத்துடன் இணைந்து 'தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்' என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. இந்த படிப்பானது சென்னை கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடைபெறும்.இதற்கான வகுப்புகள் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. 21 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் பட்டதாரிகள் சேரலாம். எனவே, தொழில் முனைவோராக விருப்புவோருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.பயிற்சி முழுவதும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் உயர்ந்த தரத்தில் நடத்தப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு இந்த https://www.youtube.com/shorts/GBnEEtTOiul www.editn.inஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி