மாணவிகளுக்கு பாராட்டு
பரங்கிப்பேட்டை; விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிப்பெற்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை, ஆசிரியர்கள் பாராட்டினர்.கடலூர் மாவட்ட அளவில் குழு விளையாட்டு போட்டிகள், நெய்வேலி இந்திரா நகர் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்17 வயதிற்குட்பட்ட பிரிவில் பூப்பந்து போட்டியில் முதலிடம், 19 வயதிற்குட்பட்ட இறகுபந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.இவர்கள், மாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணி பாராட்டினர்.