அரசு பள்ளியில் திறனறிதல் தேர்வு
புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கணத் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கில இலக்கண சிறப்பு வகுப்புகள் தினசரி காலை, மாலையில் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆங்கில இலக்கணத் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.