தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி அரிஸ்டோ பள்ளி மாணவிக்கு தங்கம்
கடலுார் : தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவி கிருஷிகா, ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவர் 2022-23ல் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த 60வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழ்நாடு அரசின் ரொக்கப்பரிசு திட்டத்தில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், 2023--24ல் சண்டிகரில் நடந்த 61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை பாராட்டி, தமிழ்நாடு அரசு ஒன்றரை லட்ச ரூபாய்க்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். பரிசு பெற்ற மாணவி கிருஷிகாவை, அரிஸ்டோ பப்ளிக் பள்ளியின் தலைவர் சிவக்குமார், நிர்வாக அதிகாரி லட்சுமி, பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே மற்றும் பள்ளி துணைமுதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.