| ADDED : டிச 03, 2025 06:08 AM
சேத்தியாத்தோப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., வின், 9 ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.,அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 9ம் ஆண்டு நினைவு நாளில், கடலுார் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவரும்திட்டக்குடியில் வரும், டிச.5,ம் தேதி காலை, 8:30 மணிக்கு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பஸ் நிலையத்தில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி அஞ்சலி செலுத்தி அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியாக விருத்தாசலம் மற்றும் புவனகிரியில் நடைபெற உள்ள அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி, அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி கிளை, வார்டு தோறும் முன்னாள் முதல்வர் ஜெ., உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி அஞ்சலி, அன்னதானம் செய்து நினைவு அஞ்சலி நிகழ்ச்சியினை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.