உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் ஊழியர் மீது தாக்கு

பெண் ஊழியர் மீது தாக்கு

ராமநத்தம்; திட்டக்குடி அடுத்த மேல் ஆதனுாரைச் சேர்ந்தவர் மேகராஜன் மனைவி கவிதா, 42. வேப்பூர் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று காலை மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கழுதுார் காட்டுச் சாலையில் சென்றபோது, பின் னால் வந்த மர்ம நபர் கவிதாவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி சென்றார். காயமடைந்த அவர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை