| ADDED : நவ 26, 2025 07:44 AM
கடலுார்: சின்னசேலத்தில் தமிழக சட்டசபை பொது கணக்கு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், கடலுார் எம்.எல்.எ., அய்யப்பன் பங்கேற்றார். தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், அப்துல் சமது, சரஸ்வதி, தலைமைச் செயலக முதன்மை செயலர் சீனுவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் பிரசாந்த், மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர். சின்னசேலம் பேரூராட்சியில் 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர். அப்போது அக்டோபர் மாதத்தில் முடிக்க வேண்டிய பஸ் நிலைய கட்டுமான பணிகள், இதுவரை முடிக்காதது தெரிந்தது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்படும் என எச்சரித்தனர்.