மேலும் செய்திகள்
திருநங்கை அடித்து கொலை
26-Jul-2025
கடலுார்: கடலுார் எஸ்.பி.,அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (எ) கோப்பெரும்தேவி,30, திருநங்கை. இவர், சக திருநங்கைகளுடன் நேற்று காலை கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, திடீரென அவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத்தை மோசடி செய்த பண்ருட்டி நபர் மீது குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர் மீது இனியாவது நடவடிக்கை கோரி தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
26-Jul-2025