உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் தொகுதியில் கவனிப்பு அமோகம்: தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் குஷி

சிதம்பரம் தொகுதியில் கவனிப்பு அமோகம்: தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் குஷி

தீ பாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் தொகுதியில் ஆளுங்கட்சி தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு போட்டிப்போட்டு 'ப' வைட்டமின் கவனிக்கப்பட்டதால், நிர்வாகிகள் குஷி அடைந்தனர். தமிழகத்தில், சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளது. மீண்டும், ஆட்சியை பிடிக்க ஆளுங்கட்சியான தி.மு.க., மற்றும் எதிர்கட்சியான அ.தி.மு.க., வும் கட்சி நிர்வாகிகளை தேர்தல் வெற்றிக்கான யுக்திகளை கடைபிடித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பண்டிகை காலங்களில் நிர்வாகிகளுக்கு 'ப' வைட்டமின் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி சிதம்பரம் சட்டசபை தொகுதியில், ஆளுங்கட்சியான தி.மு.க., சார்பில், கிளை மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு தலா ரூ. 5,000 துவங்கி, ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், நகர செயலாளர்கள், நகர பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் பொறுப்பிற்கு தகுந்தார்போல் 'ப' வைட்டமின் அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., சார்பில், கட்சியின் கிளை செயலாளர்களுக்கு ரூ.1000 துவங்கி, மற்ற நிர்வாகிகளுக்கு பொறுப்பிற்கு தகுந்தார்போல் கவனிப்பு நடந்தது. இதனால், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., போட்டிப்போட்டு கொண்டு கவனிக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள் உற்சாக மடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை