கோவிலில் துணிகர திருட்டு
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டில் பாதாகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வெளிப்புற ஷட்டரை உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றனர். மேலும், சுவாமி கழுத்தில் இருந்த தாலி மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.