என்.எல்.சி., நிறுவனத்திற்கு விருது
நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா நிறுவனம், 2023 - 24ம் ஆண்டுக்கான நிலக்கரி அமைச்சகத்தின் மதிப்புமிக்க நட்சத்திர தரவரிசை விருது பெற்றுள்ளது. போட்டித்திறன் மற்றும் பொறுப்பான சுரங்க நடவடிக்கைகளை ஊக்குவிக்க கடந்த 2019ம் ஆண்டு நட்சத்திர தரவரிசை முறைஅறிமுகமானது. மும்பையில் செப். 4ம் தேதி நடந்த விழாவில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, இணை அமைச்சர் சதீஷ் சந்திர துபே ஆகியோர் கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு தரவரிசை விருது வழங்கினர். விருதை சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, சுரங்கத்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் பெற்றுக் கொண்டனர்.