உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு விருது

ஆசிரியர்களுக்கு விருது

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் அர்-ரஹ்மத் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.நெய்வேலி மந்தாரக்குப்பம் அர்-ரஹ்மத் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த ஆண்டு விழாவில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு ஜமாத் தலைவர் மதார்ஷா தலைமை தாங்கினார். கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி அன்வர்தீன் வரவேற்றார். தலைமையாசிரியர் ஈவாஜாஸ்மீன் ஆண்டறிக்கை வாசித்தார். நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா, ஆசிரியர்களுக்கு விருது வழங்கி, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாகிகள் முகமது மீரான், அபுபக்கர், சித்திக், அப்துல்சமது, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை