உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ரதம்

 அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ரதம்

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முறையான நவீன வாசக்டமி, இருவார விழிப்புணர்வு ரதம் துவக்க விழா நடந்தது. மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மணிமேகலை, விழிப்புணர்வு ரதத்தை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், மாவட்ட குடும்ப நலச் செயலக துணை இயக்குநர் பாலகுமரன், நிலைய மருத்துவ அலுவலர் கவிதா, டாக்டர்கள் பிரேம்குமார், சுபஸ்ரீ, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சசிகலா, விரிவாக்க கல்வியாளர் சுகுமார், புள்ளி விவர உதவியாளர் கிருஷ்ணராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இதே போன்று, சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, விழிப்புணர்வு ரதத்தை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ