விழிப்புணர்வு ஊர்வலம்
விருத்தாசலம்: விருத்தாச்சலம், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தேசிய இளைஞர் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி, சரவணன், மணிகண்டன், பாரத், ராம் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு வழக்கறிஞர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில், பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் சிவகாமி நன்றி கூறினார்.