உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்தியன் வங்கியில் விழிப்புணர்வு கூட்டம்

இந்தியன் வங்கியில் விழிப்புணர்வு கூட்டம்

நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பம் கிளை இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்கும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. முதுநிலை மேலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் கீர்த்திவாசன் முன்னிலை வகித்தார். மண்டல அலுவலக மேலாளர் பார்கவி, வங்கியின் சேவைகள் பற்றி விளக்கி பேசினார். தொடர்ந்து, 'இந்தியன் வங்கி துவக்கி 118 ஆண்டுகள் முடிகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகிறோம். வங்கியில் கடன் பெறுவது, வெவ்வேறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டங்களில் சேர்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியன் வங்கியில் வாடிக்கையாள ராகி வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை