மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
31-Jan-2025
கடலுார் : கடலுார் அடுத்த வெள்ளக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்.பி., பங்கேற்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கடலுார் அடுத்த வெள்ளக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்று, போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி பருவத்தில் நல் ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என்றும், ஜாதி, மத பாகுபாடின்று கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல், உதவி தலைமைஆசிரியர் சாருமதி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Jan-2025