பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கமிஷனர் கிருஷ்ணராஜன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் கஸ்துாரி வரவேற்றார். நிகழ்ச்சியை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜேஸ்குமார், உறுப்பினர் பெனிட்டா, டாக்டர் வினோதினி ஆகியோர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணத்தை தடுப்பது, இணையவழி குற்றங்கள் பற்றி விளக்கப்பட்டது. மேலும், குழந்தை பாதுகாப்புக்கு 1098, இணையவழி குற்றங்கள் தடுக்க 1930, பெண்கள் பாதுகாப்புக்கு 181, மூத்த குடிமக்களுக்கு 14567 எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தினர். இன்ஜினியர் வெங்கடாஜலம், கவன்சிலர்கள் சத்தியா, புனிதவதி, பூபாலன், பாரூக், உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.