உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண்ணாடம்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்., திட்டக்குடி கற்போர் உதவி மையம் சார்பில், பெண்ணாடத்தில் புகையில்லா தீபாவளி விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெனின் தலைமை தாங்கினார். பேராசிரியர் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணன், பிரளயகாலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மைய பணியாளர்கள் லட்சுமி, பரமேஸ்வரி, சுகுணா, சிவசங்கரி, மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு வீட்டில் சிறு தாவரங்களான கற்றாழை, கற்பூரவள்ளி, துளசி மற்றும் மினி தோட்டம் அமைப்பது. வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரங்கள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மைய வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை