உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐயப்ப சேவா சங்க பூஜை 

ஐயப்ப சேவா சங்க பூஜை 

புவனகிரி : புவனகிரி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் விளக்கு மற்றும் கன்னிபூஜை நேற்று நடந்தது.புவனகிரி ஐயப்பா சேவா சங்கம் சார்பில் புவனகிரி ஐயப்பன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை, விளக்கு பூஜையுடன் விழா துவங்கியது.நேற்று காலை.9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. காலை 9.30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.00 மணிக்கு லட்சார்ச்சனையுடன் கன்னி பூஜை வெகு விமர்சியாக நடந்தது. பஜனை பாடல்களுக்குப்பின் பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி