நுாலகத்தில் புத்தக கண்காட்சி அய்யப்பன் எம்.எல்.ஏ., திறப்பு
கடலுார்: கடலுார் மைய நுாலகத்தில் புத்தக கண்காட்சியை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் 57வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி திறப்பு விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.வாசகர் வட்டத் தலைவர் பாஸ்கரன், கவுரவத் தலைவர் சுதர்சனம் முன்னிலை வகித்தனர். மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) சக்திவேல் வரவேற்றார். விழாவை ஒருங்கிணைப்பாளர் பால்கி ஒருங்கிணைத்தார். பேராசிரியர் ராஜா வாழ்த்தி பேசினார். அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.முதல் நிலை நுாலகர் (பொறுப்பு) ஆறுமுகம் நன்றி கூறினார்.