மேலும் செய்திகள்
பருவமழை முன்னேற்பாடு கடலுாரில் எம்.எல்.ஏ., ஆய்வு
12-Oct-2024
கடலுார் : கடலுாரில், வடிகால் வாய்க்கால் துார்வார, தனது சொந்த நிதி 1 லட்சம் ரூபாயை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார்.கடலுார் எம்.பி.அகரம் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. எம்.பி., அகரம், பள்ளிப்பட்டு, துாக்கணாம்பாக்கம் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில், வாய்க்கால் துார்வாரும் பணிக்காக கடலுார் தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் தனது நிதியில் ஒரு லட்சம் ரூபாயை ஊராட்சி தலைவர் ஞானப்பிரகாசத்திடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் தமிழரசி பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஞானம், ரமேஷ், நந்தன், முன்னாள் நிலவள வங்கித் தலைவர் ராமலிங்கம், ஊராட்சி துணைத் தலைவர் ராஜா, நிர்வாகிகள் சிந்துநாதன், அழகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Oct-2024