பக்ரீத் தொழுகை நேரம் அறிவிப்பு
விருத்தாசலம்,; ஆலடி ரோடு நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் நாளை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடக்கிறது. விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில், பக்ரீத் பெருநாள் பண்டிகை சிறப்பு தொழுகை, ஆலடி ரோடு நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் நுல்ஹக் பிறை 10 அன்று, நாளை (7ம் தேதி) காலை 6:30 மணிக்கு சிறப்பு பயான் சொற்பொழிவும், காலை 7:00 மணிக்கு சிறப்பு தொழுகையும் நடக்கிறது. எனவே, அனைத்து இஸ்லாமிய மக்களும் முன்கூட்டியே வருகை தந்து, தொழுகையில் பங்கேற்க வேண்டும். இத்தகவலை விருத்தாசலம் நகர இஸ்லாமிய அனைத்து பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு பொது செயலாளர் சேட்டு தெரிவித்துள்ளார்.