உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாழையில் கருகல் நோய் விவசாயிகள் கவலை

வாழையில் கருகல் நோய் விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதிகளில் வாழையில் இலை கருகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நெல்லிக்குப்பம், வான்பாக்கம் மற்றும் அருங்குணம் நத்தம் பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வாழை பயிரில் இலை கருகல் நோய் தாக்கியுள்ளது. இலைகள் கருகி உள்ளதால், கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கிறது.நத்தம் பகுதி வாழை விவசாயிகள் கூறுகையில், 'நெல், கரும்பு பயிர்களில் போதிய லாபம் இல்லாததால், வாழை பயிர் செய்தோம். காட்டுப்பன்றிகள் தொல்லையில் இருந்து வாழையை காப்பாற்றவே சிரமப்பட வேண்டியுள்ளது. தற்போது இலைக்கருகல் நோய் பாதித்துள்ளது.ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளோம். செலவு செய்த பணம் கூட கிடைக்குமா என சந்தேகமாக உள்ளது. வாழை விவசாயிகளை காப்பாற்ற, இப்பகுதியை வேளாண் விஞ்ஞானிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி