மேலும் செய்திகள்
இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் வேலை நிறுத்தம்
17-Apr-2025
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
21-Mar-2025
கடலுார்: கடலுாரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியன் வங்கி ஊழியர் சங்க துணை செயலாளர் ராவ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருமலை, முருகேசன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத் வரவேற்றார். தமிழ்நாடு இந்தியன் வங்கி ஊழியர் சங்க துணைத்தலைவர் மீரா, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி நடக்க உள்ள அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.அவைத்தலைவர் முருகேசன், முன்னாள் பொதுச்செயலாளர் ஸ்ரீதரன், நிர்வாகிகள் லட்சுமணன், கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். வினோத் நன்றி கூறினார்.
17-Apr-2025
21-Mar-2025