உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வங்கி மேலாளர் பைக் மோதி பலி

வங்கி மேலாளர் பைக் மோதி பலி

விருத்தாசலம்:பைக் மோதிய விபத்தில் தனியார் பாங்க் மேனேஜர் இறந்தார். புதுச்சேரியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ஈஸ்வர், 30; இவர் விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜர். நேற்று முன்தினம் மாலை அதே வங்கியில் துணை மேனேஜராக பணிபுரியும், கடலுார் செம்மண்டலத்தைச் சேர்ந்த ஜீவா கார்த்திகேயன்,26; என்பவரது பைக்கில், சின்னசேலம் வரை சொந்த வேலையாக சென்றார். பைக்கை ஜீவா கார்த்திகேயன் ஓட்டினார். மணலுார் ரயில்வே பாலம் மீது சென்றபோது, திடீர் மழை பெய்ததால் வீட்டிற்கு திரும்ப, பைக்கை திருப்பினார். அப்போது, எதிரில் வந்த பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஈஸ்வர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை