கடற்கரையில் துாய்மை பணி
புதுச்சத்திரம் : கடலுார் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில் துாய்மை பணி நடந்தது. 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் துாய்மையே சேவை விழா கடந்த 17ம் தேதி முதல் வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு, கடலுார் அஞ்சல் கோட்டம் சார்பில் பரங்கிப்பேட்டை ஊராட்சி அருகில் உள்ள சாமியார்பேட்டை கடற்கரையில் துாய்மை பணி நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி முன்னிலையில், அஞ்சல் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் சாமியார்பேட்டை கிராம பஞ்சாயத்து தலைவர் சங்கர், துணை தலைவர் மாரியப்பன், செயலாளர் பாலமுருகன், துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 150 பேர் ஒன்று கூடி காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை துாய்மை பணி மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மீனவ சமூகத்தினருக்கு சேமிப்புத் திட்டங்களின் முக்கியத்துவம், ஊழல் தடுப்புக்கான விழிப்புணர்வு அளிக்கப்பட்டன. துாய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டு, துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.