உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாரத் பெட்ரோலியம் பங்க் திறப்பு விழா

பாரத் பெட்ரோலியம் பங்க் திறப்பு விழா

கடலுார்: கடலுார் நத்தவெளி புறவழிச் சாலை - சரவணா நகரில் புதிய பாரத் பெட்ரோலியம் பங்க் திறப்பு விழா நடந்தது. கடலுார் முதுநகர் நயரா பெட்ரோல் பங்க் உரிமையாளர் அய்யூப் தலைமை தாங்கினார். சரவணா நகர் பாரத் பெட்ரோலியம் உரிமையாளர் நவ்ஷத் அய்யூப் வரவேற்றார். புவனகிரி வர்ஷன் பெட்ரோலியம் உரிமையாளர் பாண்டியன், குறிஞ்சிப்பாடி தம்பிபேட்டை சிருஷ்டி பெட்ரோலியம் ஏஜென்சி சையத் சலீம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பாரத் பெட்ரோலியம் முதன்மை விற்பனை மேலாளர் பிரவீன், உதவி மேலாளர் தர்மேந்திர சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி பெட்ரோல் பங்கின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் நவ்ஷத் அயூப் கூறுகையில், திறப்பு விழா சலுகையாக இன்று (அதாவது நேற்று) முதல் 3 நாட்களுக்கு பெட்ரோலுக்கு 3 ரூபாயும், டீசலுக்கு 2 ரூபாயும் சிறப்பு தள்ளுபடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். பெட்ரோல்,டீசல் மற்றும் வாகனங்களுக்கு தேவையான ஆயில், அடூப்ளூ 24 மணி நேர விற்பனை உண்டு. ஏ.டி.எம்.வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை