மேலும் செய்திகள்
பாரதிதாசன் பிறந்தநாள் விழா கள்ளக்குறிச்சி
01-May-2025
கடலுார்; கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் பாரதிதாசனின் 135வது பிறந்த நாள் விழா நடந்தது.மாவட்ட நுாலக அலுவலர் முருகன் தலைமை தாங்கி பேசினார். நுாலகர் ஆனந்த கணேசன் வரவேற்றார். பாரதிதாசன், உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக திருக்குறள் பேரவை மாவட்டத்தலைவர் பாஸ்கரன் வாழ்த்திப் பேசினார்.பால்கி நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார். கவுரவ தலைவர் சுதர்சனம், மனோகரன், நுாலக பணியாளர்கள் கல்பனா, பற்குணன், இந்திரா காந்தி, குமுதம் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலக ஊழியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
01-May-2025