உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை பணிக்கு பூமி பூஜை

சாலை பணிக்கு பூமி பூஜை

பண்ருட்டி:பண்ருட்டி ஒன்றியம், அரசடிக்குப்பம், அழகப்பாசமுத்திரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் பூமி பூஜையை துவக்கி வைத்தார். தெற்கு ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் பைரவன், தட்சிணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், விஜயாமிர்தராஜ், முருகவேல், முருகையன், சுப்பிரமணியன், சிவமணி, ஊராட்சி செயலாளர் சிவஞானவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !